திங்கள், 28 ஜூன், 2010

கவிதை

கவிதை (ஒரு வேளை இது கவிதை இல்லையென்றால்... ஏதோ! என்று படியுங்கள்)

நம்பிக்கை!

நம்பிக்கை இல்லாத வீடுகளில் மனைவிகள் எல்லாம் விலைமாதர்கள்!
நம்பிக்கை இல்லாத மருத்துவமனைகளில் மருத்துவர்கள் எல்லாம் கொலைகாரர்கள்!
நம்பிக்கை இல்லாத வங்கிகளில் காசாளர்கள் எல்லாம் கொள்ளையர்கள்!

பாடம் :

நண்டின் கால் நாட்டியமாக இருந்தாலும்,
நத்தியாவட்டை செடியின் நளின சிரிப்பாக இருந்தாலும்,
நாட்டிய மங்கையின் குளுங்களாக இருந்தாலும்,
நாம் படிக்கும் புத்தமாக இருந்தாலும்,
எல்லாம் எமக்கு பாடம்! பாடம்! பாடம்!

வெங்காயம்

வெங்காயமே! வெங்காயமே!
நீயல்லவா காந்தியவாதி!
உரிக்க உரிக்க சும்மா இருந்துவிட்டு - பிறகு
உரித்தவனையே அழ வைத்துவிடுகிறாயே!
நீயல்லவா காந்தியவாதி!