வியாழன், 24 ஜூன், 2010

செம்மொழி மாநாட்டிற்கு அப்துல் கலாமிற்கு அழைப்பு இல்லை ???



செம்மொழி மாநாட்டிற்கு அப்துல் கலாம் அழைக்க படாதது குறித்து "பதவியில் இருக்கும் வரை தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள், இல்லாதபோது நினைக்கவே நேரம் பத்தாது, பதவி தானே மேடை ஏற ஒரே தகுதி... தனக்கு தானே புகழ் மாலை அணிந்துக்கொள்ளவும், மகனின் எதிர்கால இருக்கையை செம்மை படுத்துவதற்கும் தானே இந்த செம்மொழி மாநாடு!!"

"நாடாளுமன்ற உரையாகட்டும், எந்த மாநில அரசு கழ்ச்சியாகட்டும், எந்த மொழியை சேர்ந்த மாணவிகளுக்கு மத்தியிலான உரையாகட்டும் "திருக்குறளை" மேற்கோள் காட்டி பேசி, குறளிற்கு பெருமை சேர்த்தவர்... அவ்வளவு ஏன்? அவர் ஜனாதிபதியாக இருந்தபோது தானே தமிழை செம்மொழியாக அறிவித்தார்கள்... " என்று என்னிடம் ஒருவர் குமுறினார்...

என்ன இழவோ ? எனக்கொன்றும் புரியவில்லை... அணைத்திலும் அரசியல்...

"சரி இதற்கெல்லாம் அழைப்பு கொடுக்கவில்லை என்பதற்காக கோபித்து கொள்ளலாமா? கலைஞர், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தயாநிதி என தன் படை சூழ (மக்களை ஏமாற்றி) 343 கோடி ருபாய் செலவில், நிலையான குடும்ப ஆட்சிக்கு எடுக்கும் விழா என்று தானே சொல்லுகிறீர்கள், பிறகு எப்படி அழைப்பை எதிபார்க்கலாம்?", என்றேன்...

என்ன? நான் பேசியது சரிதானே?

மேலும் அவர்,

"கலைஞருக்கு ரஜினி, கமல், தமிழின கலாச்சாரத்தில் அசைக்க முடியாத (?) கொண்ட குஷ்பு, வெளிமாநிலத்திலிருந்து அமிதாபச்சன் போன்றவர்கள் தானே முக்கியமானர்கள்" "திரை கூத்தாடிகளுக்கு வாரி வாரி வழங்குவதில் தானே எம் அரசு சக்கை போடு போடுகிறது" "விலை வாசி கிர்ரென்று எகுறி கொண்டிருக்கும் அதே வேளையில், எதை பற்றியும் கவலை படாமல் நடிகைகளின் நடன நிகழ்ச்சியை கண்டுகளித்து விட்டு, அவர்கள் பல (?) வழிகளில் சம்பாதிப்பது போதாதென்று, இலவச நிலம் வேறு வழங்குகிறார்" என்றெல்லாம் தமிழின தலைமகனை தூற்றி பேசினார்...

அதற்கு மேல் என்னால் ஒன்றும் பேச முடியவில்லை... வாயை மூடி கொண்டு, கலைஞர் டிவியில் மானாட மயிலாட பார்த்து கொண்டிருந்தேன்...

(என கருத்து உங்களுக்கு 'வஞ்சகப் புகழ்ச்சி' போல் தோன்றினால், அதற்கு நான் பொறுப்பல்ல...)